மஞ்சூர் : மேலுார் மகாலிங்கேஸ்வரர் கோவிலில், மழை வேண்டி கிராம மக்கள் சிறப்பு பூஜை செய்தனர். மஞ்சூர் அடுத்துள்ள மேலுார் மகாலிங்கேஸ்வரர் கோவில், மேற்கு நாடு கிராமத்தை சேர்ந்த, 33 கிராம மக்கள் ஒன்றிணைந்து மழை வேண்டி சிறப்பு பூஜை நடத்தினர். இதில், அபிஷேகம் ஆராதனைகள் நடந்தன. இதற்கு, மேற்குநாடு பார்ப்பத்தி கிருஷ்ணாகவுடர், சின்னகனி போஜாவுடர், மேலுார் ஊர் தலைவர் சத்துருக்கன், பெள்ளாகவுடர் மற்றும், 33 ஊர் தலைவர் உட்பட பலர் பங்கேற்றனர்.