பதிவு செய்த நாள்
19
நவ
2016 
11:11
 
 மாமல்லபுரம்: மாமல்லபுரம், மல்லிகேஸ்வரர் கோவிலுக்கு, வண்ணம் தீட்டும் பணி துவங்கியுள்ளது. மாமல்லபுரத்தில், அறநிலையத்துறையின் ஆளவந்தார் அறக்கட்டளையின் கீழ், ஒரே சைவ கோவிலாக, மல்லிகேஸ்வரி உடனுறை மல்லிகேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவில், பழமையானது. எனினும், 15 ஆண்டு களுக்கு முன், முற்றிலும் சீரழிந்து, முட்புதர் சூழ்ந்து, வழிபாடு இன்றி அவலத்தில் இருந்தது. திருப்பணிகள் மேற்கொண்டு, சுவாமி, அம்பாள், விநாயகர், முருகர் சன்னிதிகளுடன் கோவில் புதுப்பிக்கப்பட்டு, 2004ம் ஆண்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 12 ஆண்டுகள் கடந்த நிலையில், கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டு, சன்னிதிகளுக்கு புதிய வண்ணம் தீட்டி, பழுதுகளை சீரமைக்க, பணி துவக்கப்பட்டுள்ளது.