பதிவு செய்த நாள்
19
நவ
2016
12:11
கே.ஜி.எப்: ராபர்ட்சன்பேட்டை பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலின் நுாற்றாண்டை ஒட்டி, சிறப்பு ஹோமங்கள், கல்யாண உற்சவம், லட்ச புஷ்பார்ச்சனையுடன் வரும், 26, 27ம் தேதிகளில் விழா கொண்டாடப்படுகிறது.ராபர்ட்சன்பேட்டை கீதா சாலையில் உள்ள பிரசன்ன லட்சுமி வெங்கடரமண ஸ்வாமி கோவில், 1915ல் நிறுவப்பட்டது. இந்த கோவிலின் நூற்றாண்டு விழா வரும், 26, 27ம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது.முதல் நாளன்று காலையில் தேவதை பிரார்த்தனை, விஸ்டேகேஸ்நாராதனே, ஸ்வஸ்திக் புண்ணியாவாசனம், பஞ்ச கவ்ய ஆராதனை, பஞ்ச கவ்ய பிரசன்னா, ரக் ஷ பந்தனா, அக்னி பிரதிஷ்டை, அகல்மஷ ஹோமம், வாஸ்து ஹோமம், நித்ய ஹோமம், மகா சுதர்சன ஹோமம், மகா பூர்ணாஹுதி, மகா மங்களார்த்தி, தீர்த்த பிரசாத வினியோகம்,மதியம் திருமலை திருப்பதி கோவில் அன்னமாச்சார்யா பிரசார பக்தி இசை குழுவினரின் இசை கச்சேரி; மாலையில் ஆலய பிரவேசம், தேவதை பிரார்த்தனை, விஸ்டேகேஸ்நாராதனே, ஸ்வஸ்திக் புண்ணியாவாசனம், பூதேவி பிரார்த்தனை, மிருதிக சங்கிரஹணம், அங்குரார்ப்பணம், கலச ஸ்தாபனம், விஷ்ணு பாரமோதிக ஹோமம், அஷ்டாஷதி ஈங்காராதி ஹோமம், லகு பூர்ணாஹுதி, நிவேதனா, மகா மங்களார்த்தி, தீர்த்த பிரசாத விநியோகம், இரவில் தேர் பவனி நடக்கிறது.வரும், 27ம் தேதி காலையில் தேவதை பிரார்த்தனை, விஸ்டேகேஸ்நாராதனே, ஸ்வஸ்திஹாவாசனம், அக்னி பிரதிஷ்டாபனை, கும்ப ஆராதனை, ஹோமங்கள், பிரசன்ன லட்சுமி வெங்கட ரமணசாமி சிறப்பு கல்யாண உற்சவம், மகா மங்களார்த்தி, தீர்த்த பிரசாத விநியோகம்,மதியம் பக்தி இசை கச்சேரி, மாலையில் பல்வேறு மலர்களால் பிரசன்ன லட்சுமி வெங்கட ரமணசாமிக்கு லட்சார்ச்சனை, மகாபூர்ணாஹுதி, மகா மங்களார்த்தி, தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நுாற்றாண்டு விழா உற்சவதார குழு தலைவர் பி.ஏ.சந்திரசேகர் தலைமையில் குழுவினர் செய்துள்ளனர்.