பதிவு செய்த நாள்
21
நவ
2016
11:11
திருப்பதி: திருமலை ஏழுமலையான் உண்டியலில், 10 நாட்களில், 30 கோடி ரூபாயை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டு ரத்து செய்யப்பட்டதால், சாதாரண மக்கள், சில்லரை இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். ஆனால், திருப்பதி ஏழுமலையான் உண்டியல் மட்டும், வழக்கத்திற்கு அதிகமாக நிரம்பி வழிகிறது. சனி, ஞாயிறுகளில் பக்தர்கள் வருகை குறைந்தாலும், உண்டியலில், தினமும், 3 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகி உள்ளது.நவ., 9 முதல், தொடர்ந்து, 10 நாட்களில், 30.36 கோடி ரூபாய் உண்டியல் மூலம் வசூலாகி உள்ளது. இது, அக்டோபரில் கிடைத்த உண்டியல் வருவாயை விட, எட்டு கோடி ரூபாய் அதிகம். வரும் நாட்களில், வருமானம் மேலும் அதிகரிக்கலாம் என, தேவஸ்தானம் தெரிவித்தது.இதே போல, ஆந்திராவில் உள்ள விஜயவாடா, காளஹஸ்தி, காணிப்பாக்கம், ஸ்ரீசைலம் உள்ளிட்ட கோவில்களின் உண்டியல் வருவாயும், எதிர்பாராத அளவிற்கு உயர்ந்துள்ளது.