பதிவு செய்த நாள்
24
நவ
2016
12:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், படவேட்டில் உள்ள ரேணுகாம்பாள் அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு இப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் மட்டுமன்றி, வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்தும் தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை, மூன்று மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம். அதன் படி, நேற்று முன்தினம் கோவில் உதவி ஆணையர் மோகனசுந்தரம், ஆய்வாளர் தேவராஜ், செயல் அலுவலர் மருதுபாண்டி யன் ஆகியோர் முன்னிலையில், உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில், நான்கு லட்சத்து, 57 ஆயிரத்து, 716 ரூபாய், 70 கிராம் தங்கம், 25 கிராம் வெள்ளி இருந்தது.