காஞ்சியிலிருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள காவேரிப்பாகத்தில் சுந்தரவரதர் கோயில் உள்ளது. இங்குள்ள கருட பகவானை வளர்பிறை பஞ்சமி தினத்தன்று தேனால் அபிஷேகம் செய்து, தயிர் அன்னம் நைவேத்யம் செய்து வழிபட தோஷங்கள் நீங்கி உடனடியாகத் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை.