பதிவு செய்த நாள்
03
டிச
2016
02:12
மேட்டுப்பாளையம்: சிறுமுகை சின்னக்கள்ளிப்பட்டி ரங்கம்பாளையத்தில் உள்ள ராமபக்த ஹனுமான் கோவிலின் முதலாம் ஆண்டு விழாவில் தொடர் லட்சார்ச்சனை துவக்க விழா நடந்தது.
ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து 108 திரவிய கலச ஆவாஹனம், மகா சங்கல்பம், தொடர் லட்சார்ச்சனை, தீபாராதனை, பிரசாத விநியோகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. திருநாராயண சுவாமி டிரஸ்ட் தலைவர் கிருஷ்ணன் ஐயங்கார் தலைமை வகித்தார். சத்யகுமார், வெள்ளிங்கிரி முன்னிலை வகித்தனர். விழாக்குழு நிர்வாகி ராம்குமார் வரவேற்றார். காரமடை ரெங்கப்பிரியன், வெங்கடேசபிரசாத், பீஷ்மாச்சாரியார், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் யாக வேள்விகளை நடத்தினர். 108 திரவிய கலச மகா திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், அக்னி பிரதிஷ்டை, ராமமக்த ஹனுமான் மூலமந்திரம், பீஜாட்சர, காயத்ரி ேஹாமம், பூர்ணாஹுதி, சாற்றுமுறை, தீர்த்தப்பிரசாதம், ஆசீர்வாதம்
ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சக்திவேல், ராஜன் உள்பட ஏரளமானவர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.