பதிவு செய்த நாள்
03
டிச
2016
02:12
சென்னை: பெரியமேடு, பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் பவித்ரோற்சவம், டிச.,3 துவங்குகிறது.
சென்னை, பெரியமேட்டில், அலர்மேல்மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆண்டிற்கான, பவித்ரோற்சவ திருவிழா, டிச.,3 துவங்குகிறது. காலை, 7:00 மணி முதல், அனுக்ஞை, வேத பிரபந்த தொடக்கம், அங்குரார்ப்பணம், பவித்ர பிரதிஷ்டை, பூர்ணாஹுதி, சாத்துமுறை ஆகியவை நடக்கிறது. மூன்று நாட்கள் நடக்கும் இவ்விழாவில், டிச., 4ம் தேதி, மகா பூர்ணாஹுதி, திருமஞ்சனம், அட்சதை ஆசீர்வாதத்துடன் நிறைவு பெறுகிறது. இவ்விழா, திருவல்லிக்கேணி தென்னாச்சார்ய வைஷ்ணவ பாதம் தாங்கிகள் கைங்கர்ய சபையினர் சார்பில் நடத்தப்படுகிறது.