குமாரபாளையம்: குமாரபாளையத்தில், வரும், 9ல் லட்சுமிநாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடக்கிறது.
குமாரபாளையம், அக்ரஹாரம் பகுதியில், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறைக்குட்பட்ட லட்சுமிநாராயண சுவாமி கோவில் உள்ளது. இங்கு லட்சுமிநாராயண சுவாமி, காசி விசாலாட்சி உடனமர் காசி விசுவேசுவர சுவாமி, ஆஞ்சேநேயர் கோவில்கள் உள்ளன. இந்த கோவிலின் புனரமைப்பு பணிகள், கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடந்து வருகின்றன. பணிகள் நிறைவு பெற்று, வரும், 9 காலை, 8:00 9:00 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடக்கவுள்ளது. விழாவில், அமைச்சர் தங்கமணி, மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.