கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி உற்சவ மூர்த்தி கும்பாபிஷேக திருக்கல்யாண விழா நடந்தது.
கிருஷ்ணகிரி, பழையபேட்டையில் சுந்தர விநாயகர் மற்றும் கடைவாசல் மகா மாரியம்மன் கோவிலில் உள்ள, வள்ளி தேவசனா சமேத சுப்பிரமணிய சுவாமி உற்சவ மூர்த்தி கும்பாபிஷேக திருக்கல்யாண உற்சவ விழா டிச.,2 நடந்தது. டிச.,2 விமான கும்பாபிஷேகம், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி உற்சவ மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம், திருக்கல்யாண வைபவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.