பதிவு செய்த நாள்
05
டிச
2016
11:12
கடலாடி: மழை பெய்ய வேண்டி கடலாடியில் அரச மரம், வேப்ப மரத்திற்கு திருமணம்நடந்தது இந்த
திருமணத்திற்காக பத்திரிக்கை அச்சடிக்கப்பட்டு, அப்பகுதி முழுவதும் திருமண
விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. கடலாடியில் உள்ள பழமையான
சித்திவிநாயகர் கோயிலின் இடதுபுறம் 20 வயதுடைய அரசமரத்தை, பின்னி, பிணைந்த
நிலையில் வேப்பமரம் நன்கு வளர்ந்துள்ளது.
அரசமரத்தை பரமேஸ்வரனாவும்,
வேம்புவை பார்வதி தேவியாகவும் பாவித்து நேற்று காலை 11 மணிக்கு திருமணம்
நடந்தது. திருமண நிச்சயதார்த்தம், மணமக்கள் வீட்டார் அறிமுகம், வரவேற்பு
நிகழ்ச்சி நடந்தது. பின் வேம்பு, அரச மரங்களுக்கு வேதமந்திரம் முழங்க
திருமணம் நடந்தது. கடலாடி சுற்றுவட்டார மக்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.
அனைவருக்கும், தாம்பூலம் பிரசாதமாக வழங்கப்பட்டது. அன்னதானம் நடந்தது.