பதிவு செய்த நாள்
05
டிச
2016
12:12
மாங்காடு: மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. குன்றத்துார் அடுத்த மாங்காட்டில், 1,500 ஆண்டுகள் பழமையான, பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. கடந்த, 2001ம் ஆண்டில், இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த நிலையில், 1 கோடியே, 41 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்றன.
இதையடுத்து, நேற்று காலை, 8:00 மணிக்கு, கோவில் கோபுரங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி, கும்பாபிஷேகம் செய்தனர். நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.