Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் டிச.13 வரை ... வரதராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழா வரதராஜ பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி.மலை கோவிலுக்கு நெய் காணிக்கை பக்தர்களுக்கு தனி உண்டியல்
எழுத்தின் அளவு:
தி.மலை கோவிலுக்கு நெய் காணிக்கை பக்தர்களுக்கு தனி உண்டியல்

பதிவு செய்த நாள்

06 டிச
2016
02:12

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்த, உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ,கார்த்திகை தீப திருவிழா, 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. 12ம் தேதி, 2,668 அடி உயர மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.இதற்காக, 3,500 கிலோ நெய், ஆவின் நிறுவனத்திடமிருந்து கோவில் நிர்வாகம் கொள்முதல் செய்துள்ளது. மேலும், பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்த, ஒரு கிலோவுக்கு, 200 ரூபாய், அரை கிலோவுக்கு, 100 ரூபாய், கால் கிலோவுக்கு, 50 ரூபாய் காணிக்கை வசூலிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், நேற்று கோவில் கொடி மரம் அருகே பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்த வசதியாக, காணிக்கை உண்டியல் வைக்கப்பட்டது. இதில் பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்தினர். உண்டியல் மூலம் செலுத்தப்படும் காணிக்கை, யார், எவ்வளவு தொகை செலுத்தினர் என்ற விபரம் தெரியாது. அதனால், பக்தர்கள் தாங்கள் விரும்பும் அளவுக்கு, எவ்வளவு தொகை வேண்டுமானாலும் செலுத்தலாம். ஆண்டுதோறும், 25 லட்சம் பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்தி வருகின்றனர். வரும், 9ல், ராஜகோபுரம் திட்டிவாசல் அருகே, நெய் காணிக்கை செலுத்த சிறப்பு பிரிவு துவங்கப்பட உள்ளது. இங்கு பணமாகவோ, நெய்யாகவோ காணிக்கை செலுத்தலாம்.மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு, மார்கழி மாதம் திருவாதிரையன்று நடக்கும் ஆருத்ரா தரிசனத்திற்கு பின், தீப மை பிரசாதமாக வழங்கப்படும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar