குற்றாலநாத சுவாமி கோயிலில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2011 11:10
குற்றாலம் : குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலில் ஐப்பசி விசு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. குற்றாலம் குற்றாலநாதர் குழல்வாய் மொழியம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி விசு திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு இத்திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து திருவிலஞ்சி குமாரர் வருகை மற்றும் பலிநாயகர், அஸ்திரதேவர் வீதியுலா வரும் நிகழ்ச்சியும், அப்பர் சுவாமிகள் உழவாரப் பணிகளும், மாலையில் வெள்ளி ஏக சிம்மாசனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடந்தது. பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, நான்கு தேர்கள் வீதியுலா, சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல், திருத்தேர் வலம் வருதல், நடராஜமூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து 18ம் தேதி வரை நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் சுகுமாரன் தலைமையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.