பாபநாசம்: தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவிலில் அம்பாள் சந்நதி எதிரில் அமைந்துள்ள வன்னி விருட்சகம் மரத்திற்கு விஜயதசமியை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவகடாட்சம் முன்னிலையில் சிறப்பு பூஜையும் வழிபாடு செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சயில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பக்கிரிசாமி, ஆன்மீக ஜோதிடர் முருகேசன், ஓய்வு பெற்ற ஆசிரியர் மூர்த்தி, கருவூல உதவியாளர் வீராசாமி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.