பதிவு செய்த நாள்
06
டிச
2016
03:12
பவானி: பவானி அருகே, மாதேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, நடந்தது. பவானி, ஜம்பை கிராமம், கருக்குபாளையத்தில் மாதேஸ்வரன் மலைமீது, காத்யாயனி அம்பிகா சமேத மாதேஸ்வர சுவாமி கோவில் புதியதாக கட்டப்பட்டுள்ளது. கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 2ல் தொடங்கியது. நேற்று அதிகாலை விநாயகர் பூஜை, மஹா பூர்ணாஹுதி, நான்காம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து, பரிவார மூர்த்திகள் மற்றும் காத்யாயனி அம்பிகா சமேத மாதேஸ்வர சுவாமிக்கு கும்பாபி?ஷகம் நடந்தது. ஜம்பை, தளவாய்பேட்டை, கருக்குப்பாளையம் சுற்று வட்டார பகுதி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
* இதேபோல் பவானி, மூவேந்தர் நகர் முத்து மாரியம்மன் கோவில், கும்பாபிஷேக விழா, நேற்று காலை வெகு விமர்சையாக நடந்தது. கணபதி, சுப்ரமண்யர், கருப்பண்ணசாமி, ஜல விநாயகர், நவகிரஹம் மற்றும் முத்துமாரியம்மன் ராஜ கோபுர விமானங்களுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.