குளித்தலை: குளித்தலை அடுத்த, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வர் மலைக்கோவிலில், கார்த்திகை மாத திங்கள் கிழமை எனப்படும், சோமவாரம் கொண்டாடுவது வழக்கம். நேற்று கார்த்திகை மாதம், மூன்றாம் திங்கட்கிழமையை முன்னிட்டு, சோமவாரம் நிகழ்ச்சி நடந்தது. குளித்தலை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து பக்தர்கள், கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் குடும்பத்துடன் கோவில் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிரிடப்பட்ட தானியங்களை கோவில் அடிவாரத்தில் உள்ள பொன்னிடும் பாறையில் போட்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் அதிகம் பேர் பங்கேற்றதால், அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டிருந்தது.