Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை தீப திருவிழா: 63 ... தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மறைந்த முதல்வர் ஜெ.,வுக்கு மோட்ச தீபம் தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
85 ஆண்டுக்கு பின் கங்கைகொண்டசோழபுரத்தில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
85 ஆண்டுக்கு பின் கங்கைகொண்டசோழபுரத்தில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

09 டிச
2016
10:12

பெரம்பலுார் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், 85 ஆண்டுகளுக்கு பின், பிப்., 2ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. அரியலுார் மாவட்டம், கங்கை கொண்டசோழபுரத்திலுள்ள பிரகதீஸ்வரர் கோவில், 1,000 ஆண்டுகளுக்கு முன், ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திரசோழனால், கட்டப்பட்டது. அவர், கங்கை நதி வரை போராடி வெற்றி பெற்றதன் சின்னமாக கருதப்படுகிறது. உலக பிரசித்தி பெற்ற இக்கோவில், உலக புராதன சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது. இக்கோவிலின் கலைசிற்பங்களை கண்டுகளிக்க, இந்தியா மட்டுமல்லாது பிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா, உள்ளிட்ட பல நாட்டு மக்கள் வந்து பார்த்து வியந்துள்ளனர்.இக்கோவிலில் உள்ள சிங்கமுக கிணறு, ஒரே கல்லில் ஆன நவகிரகங்கள், மகிஷாசுரமர்த்தினி துர்க்கை அம்மன் கோவில், 20 அடி உயர நந்தி பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் உள்ள சிவலிங்கம், 60 அடி சுற்றளவும், பதிமூன்றரை அடி உயரமும் உடையதாகும். இக்கோவிலில், கடைசியாக, 1932ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தற்போது, 85 ஆண்டுக்கு பின், வரும், 2017 பிப்., 2ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலைய துறை மற்றும் தொல்லியல் துறை அனுமதியுடன், காஞ்சி அன்னாபிஷேக கமிட்டியினர் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை, கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம் உட்பட, ஐந்து வகையான ஹோமங்கள் நடைபெற்றன. நேற்று காலை, 9:30 மணிக்கு, மகாதீபாராதனை, மற்றும் பாலாலயம், முகூர்த்த கால் நடுதல் நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாஷ்யகார உற்சவம் இன்று திங்களன்று வெகு சிறப்பாகத் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் செல்ல பயன்பட்டு வரும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப்.16ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar