பதிவு செய்த நாள்
09
டிச
2016
11:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில், நேற்று, 63 நாயன்மார்கள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா, கடந்த, 3ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இதில் நேற்று, சிவபெருமானை நினைத்து மனமுருகி, ஐந்து எழுத்து மந்திரத்தை ஓதி வழிபட்ட, 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபி?ஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, 63 நாயன்மார்களை, பள்ளி மாணவர்கள் பலலக்கில் தூக்கிச் சென்றனர். மாட வீதியில் வலம் வந்தனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், சிவனடியார்கள், சாதுக்கள் பங்கேற்றனர்.