சபரிமலை: சபரிமலையில் மண்டல சீசன் தொடங்கி 22 நாட்கள் கடந்த நிலையில், வருமானம் 73.17 கோடி ரூபாயாக அதிகரித்தது. இது கடந்த ஆண்டை விட 12 கோடி ரூபாய் அதிகமாகும். முக்கிய வருமான விபரங்கள் : அபிஷேகம் 72.88 லட்சம் ரூபாய், அப்பம் 6.12 கோடி ரூபாய், அரவணை 32.18 கோடி ரூபாய், காணிக்கை 23.83 கோடி ரூபாய், அறை வாடகை 1.67 கோடி ரூபாய், கான்ட்ராக்ட் வருமானம் 4.88 கோடி ரூபாய். மொத்த வருமானம் 73.17 கோடி ரூபாய். கடந்த ஆண்டு இதே கால அளவில் 61.64 கோடி ரூபாயாக இருந்தது.