பதிவு செய்த நாள்
09
டிச
2016
12:12
படுநெல்லி : சிவன் கோவிலில் வழிபாட்டிற்கு வந்த சென்னையைச் சேர்ந்த ஆன்மிக ஆர்வலர் ஒருவர், கோவிலை புதுப்பித்து கட்டி வருகிறார். காஞ்சிபுரம் அடுத்த படுநெல்லி கிராமத்தில் பழமை வாய்ந்த சந்திரமவுலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சில ஆண்டுகளுக்கு முன், சிவலார்பட்டி பகுதியைச் சேர்ந்த, உர நிறுவனத்தின் ஓய்வுபெற்ற தீயணைப்பு பாதுகாப்பு அதிகாரி, நா.குருசாமி நாயுடு, 73, என்பவர் வந்த போது, அவரின் மனதில் ஏற்பட்ட மாற்றங்களால், இப்போது இங்கு சந்திர மவுலீஸ்வரருக்கு புதிய கோவில் கட்டப்படுகிறது.
ஆன்மிகம் தான் முதல் பணி: சிவன் மீது பற்றிருக்கும் ஆன்மிக குடும்பம். இந்த கோவில் குறித்து ஆன்மிக புத்தகம் ஒன்றில் கட்டுரை வெளியாகி இருந்தது. அன்றிலிருந்து இங்குள்ள சிவனை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இங்கு வந்து, சந்திர மவுலீஸ்வரரை பார்த்த போது, எனக்குள் மிகப்பெரிய மன மாற்றம் ஏற்பட்டது. உள்ளுணர்வு துாண்டுதலால், இந்த கோவிலை கட்டி வருகிறேன். -நா.குருசாமிநாயுடு, திருவொற்றியூர்