பதிவு செய்த நாள்
10
டிச
2016
11:12
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூரில், 40 ஆண்டுகளுக்கு முன், ஏகாதசி விழாவுக்கு முதல் நாள், கோவில் யானை கேசவன் இறந்தது.
இதன் நினைவு தினம் டிச.,9ல் அனுஷ்டிக்கப்பட்டது. மூலவரின் அருளை பெற்ற, இந்த யானையின் இறப்பை நினைவுபடுத்தும் வகையில், தசமி நாளான டிச.,9 காலை, 9:00 மணியளவில் உணவு வழங்கும், "யானையூட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதன் பின், அலங்கரிக்கப்பட்ட கேசவன் யானை போட்டோவுடன், தேவஸ்தானத்திற்கு சொந்தமான, 30க்கும் மேற்பட்ட யானைகள் வீதி உலா வந்தன. ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் தெற்கு கோபுர நடை அருகேயுள்ள கேசவன் உருவ சிலைக்கு முன், யானைகள் அணிவகுத்தன. தேவஸ்தானத்திற்கு சொந்தமான கஜராஜரத்னம், "பத்மநாபன் என்ற யானை, கேசவன் உருவ சிலைக்கு புஷ்பாஞ்சலி செலுத்தியது.