பதிவு செய்த நாள்
12
டிச
2016
12:12
ஆர்.கே.பேட்டை: வங்கனுார் வியாசேஸ்வரர் மலைக்கோவிலில், நேற்று மாலை, பிரதோஷ அபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, வங்கனுார் வியாசேஸ்வரர் மலைக்கோவிலில், நேற்று மாலை, பிரதோஷ விழா நடந்தது. மாலை, 4:30 மணிக்கு, நந்தியம் பெருமானுக்கு, பால், பன்னீர், தேன், என, பல்வேறு அபிஷேகம் நடந்தது. பின், அருகம்புல், மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பின். பிரதோஷநாதர் கோவில் உள் புறப்பாடு எழுந்தருளினார். அபிஷேகம் மற்றும் சுவாமி தரிசனத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.