வாலாஜாபேட்டை: வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில், மகா காளி யாகம் நடந்தது. துஷ்ட சக்திகள் அகலவும், கலைத்துறையில் சிறந்து விளங்கவும், கடன் தொல்லைகள் விலகவும், வியாபாரம், திருமண தடை விலகவும், மூன்று நாட்கள் நடக்கும் மகா காளி யாகம், நேற்று வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில் துவங்கியது. நாளை வரை யாகம் நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.