பதிவு செய்த நாள்
12
டிச
2016 
12:12
 
 நாமக்கல்: வரும், 2017 புத்தாண்டு அபிஷேகத்துக்காக, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு முன்பதிவு துவங்கியது. நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம், கவசம் சாத்துதல், தங்கத்தேர் இழுத்தல் போன்றவற்றுக்கு முன்பதிவு முறையில், கட்டணம் வசூலிக்கப்பட்டு, பூஜைகள் நடத்தி கொடுக்கப்படுகிறது. அதன்படி, வரும், 2017க்கான முன்பதிவு நேற்று துவங்கியது. ஒருநாள் அபிஷேகம், வடமாலை சாற்றுதல் ஆகியவற்றுக்காக, ஐந்து பேர் வரை பங்கேற்கலாம். தலா, 6,000 வீதம், மொத்தம், 30 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படும். முத்தங்கி அலங்காரத்துக்கு, ஒரு நபருக்கு, 3,000 ரூபாய், தங்க கவசத்துக்கு, 5,000 ரூபாய், தங்கத்தேர் இழுக்க, 2,000 ரூபாய், வெள்ளி கவசத்துக்கு, 750 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும். ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்களில், வெண்ணைய் காப்பு அலங்காரம் செய்யப்படும். அதற்கு, அப்போதைய விலை நிலவரப்படி, கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல், சந்தனகாப்பு அலங்காரத்துக்கும், அப்போதைய விலை நிலவரப்படி கட்டணம் வசூலிக்கப்படும். நாமகிரித்தாயார் தங்க கவசத்துக்கு, 750 ரூபாய், நரசிம்மர் திருக்கல்யாணம் நிகழ்ச்சிக்கு, 2,500 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு நேற்று முதல் துவங்கியதால், உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளிமாவட்ட பக்தர்களும், தங்கள் பெயரை முன்பதிவு செய்தனர்.