காரைக்கால்: திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சோமவார விழாவையொட்டி 1008 சங்காபிஷேகம் நேற்று நடந்தது. ரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வர கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சிவ ஆலயங்களில் கார்த்திகை மாத சோமவார திங்கள் கிழமைகளில் விஷேச பூஜைகள் நடைபெறும். திருநள்ளார் கோவிலில் ஒவ்வொரு திங்கள் கிழமையும் 108 சங்காபிஷேகம் நடந்தது வந்தது. சோமவார நிறைவையொட்டி நேற்று 1008 சங்கு அபிஷேகம் நடந்தது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, புன்னியாகவாஜனம், கலச பூஜை,மகா பூர்ணாஹீதி, தீபாராதனை நடந்தது. பின் தர்பாரண்யேஸ்வர், தியாகராஜருக்கு அபிஷேகம், மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. விழாவையொட்டி கோவிலில் உள்ள சொர்ண கணபதி, முருகன், பிரணாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் மகா தீபாராதனையும் நடத்தப்பட்டது. சங்காபிஷேகத்தில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.