திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட பூஜாரிகள் பேரவை சார்பாக ஆவிளிப்பட்டி ஆதிசுயம்பு ஈஸ்வர் அபிராமி ஆலயத்தில் திருக்கார்த்திகை தீப வழிபாடு சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு நடத்தப்பட்டது. மாவட்ட தலைவர் உதயக்குமார் சிவாச்சாரியார் தலைமையிலும், மாவட்ட செயலாளர் நெச்தில்குமார், பொருளாளர் பிச்சை உட்பட பலர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதமும், திருவாசக புத்தகமும் வழங்கப்பட்டது.