18ம் முறை சபரி யாத்திரையின் போது தென்னம்பிள்ளையை எடுத்துச் செல்வது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2016 04:12
முதல்முறை தொடங்கி ஒவ்வொரு முறையும் சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும்போதும் ஐயப்பமார்களுக்கு பலவிதமான மனமாற்றங்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக ஐயப்பன்மார்களுக்கு அவர்களுக்குள் இருக்கும் தீயகுணங்கள் அகன்று நல்ல குணங்கள் துளிர்க்கும். ஐயப்பமார்கள் அவர்களிடமிருந்த அஞ்ஞானங்களைத் துறந்து மெய்ஞ்ஞானத்தை அடைகிறார்கள். இதன் மூலம் அவர்களது பழைய பிறவியைத் துறந்து புனர் ஜன்மம் பெறுகின்றனர். தென்னையை நாம் மனித இனத்துக்கு இணையாகவே கருதுகின்றோம். அதனால் அதை தென்னம்பிள்ளை என்றே அழைக்கிறோம். மறுபிறவி எடுப்பதை குறிப்பதற்கே தென்னம்பிள்ளையை எடுத்துச்சென்று அங்கே நடுகிறோம்.