காசிவிசுவநாதர் கோயிலில் 14ம் தேதி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11அக் 2011 11:10
தென்காசி : தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் வரும் 14ம் தேதி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. தென்காசி உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதர் கோயிலில் ஆண்டு தோறும் திருக்கல்யாண திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு வரும் 14ம் தேதி திருக்கல்யாண திருவிழா துவங்கி 24ம் தேதி வரை நடக்கிறது. 14ம் தேதி காலையில் திருக்கொடியேற்றம் நடக்கிறது. மாலையில் அப்பர் சுவாமிகள் உழவாரப்பணி விடை, ஆவாஹன பலிநாயகர் எழுந்தருளல், பூங்கோயில் வாகன உலா நடக்கிறது. விழாவின் இரண்டாம் நாளான 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை அம்பாள் காமதேனு வாகனம், சிம்ம வாகனம், ரிஷப வாகனம், பூங்கோயில், அன்ன வாகனம், பல்லக்கு சயனம், கிளி வாகனத்தில் எழுந்தருளல் மற்றும் மண்டகப்படிதாரர் பூஜை வழிபாடு நடக்கிறது. ரும் 22ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 8.30 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. மாலையில் பல்லக்கில் அம்பாள் எழுந்தருள்கிறார். 23ம் தேதி ரிஷப வாகனத்தில் அம்பாள் திருவீதி உலா வருகிறார். விழாவின் இறுதி நாளான 24ம் தேதி காலையில் அம்பாள் யானைப்பாலம் தீர்த்தவாரி மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். மாலையில் தெற்குமாசி வீதியில் காசிவிசுவநாதர்- உலகம்மனுக்கு தபசு காட்சி கொடுக்கிறார். இரவு சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. அம்மன் சன்னதி மண்டபத்தில் நடக்கும் இத்திருக்கல்யாணத்தை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்கின்றனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் கவிதா பிரியதர்ஷினி, கோயில் நிர்வாக அதிகாரி கணபதி முருகன், கோயில் பணியாளர்கள் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.