பதிவு செய்த நாள்
11
அக்
2011
11:10
நகரி:""திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக ஒதுக்கப்படும் தேவஸ்தான தங்கும் விடுதிகளை, சுற்றுலாத் துறையின் உபயோகத்திற்கு ஒதுக்குவதற்கு, தேவஸ்தான நிர்வாகம், தனியார் வியாபார நிறுவனம் அல்ல. அடுத்த ஆண்டு முதல், சுற்றுலாத் துறைக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை நீட்டிக்க முடியாது, என, திருப்பதி தேவஸ்தான போர்டின் சேர்மன் பாபிராஜு தெரிவித்தார். திருப்பதியில் தேவஸ்தானம் சார்பில் செயல்பட்டு வரும் ஸ்ரீநிவாசம் தங்கும் விடுதியை ஆய்வு செய்த அவர் மேலும் கூறியதாவது:திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம், மாதவம் தங்கும் விடுதிகளில் அறைகளை பதிவு செய்து கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக ரேணிகுண்டா, திருப்பதி ரயில் நிலையங்களில், புக்கிங் கவுன்டர் திறக்கப்படும். தற்போது சுற்றுலாத் துறைக்கு, திருப்பதியில் உள்ள விஷ்ணுநிவாசம் விடுதியில் அறைகள் ஒதுக்க, தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்.சுற்றுலாத் துறைக்கு இதுவரை ஒதுக்கியுள்ள விடுதிகளை, மீண்டும் தேவஸ்தானம் வசம் ஒப்படைக்கும்படி, அவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளது.இவ்வாறு சேர்மன் பாபிராஜு தெரிவித்தார்.