பதிவு செய்த நாள்
11
அக்
2011
11:10
திசையன்விளை : கடகுளம் ராஜகன்னி மாதா ஆலய திருவிழா துவங்கியது. கடகுளம் ராஜகன்னி மாதா ஆலய திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழா வரும் 16ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளில் கொடியேற்ற திருப்பலி, திசையன்விளை பங்குதந்தை டோமினிக் தலைமையில் கொடியேற்றம், பெரியதாழை உதவி பங்குதந்தை குழந்தைராஜன், பொத்தகாலன்விளை திருத்தொண்டர் அகிலன் ஆகியோர் மறையுரை, ஜெபமாலை, நற்கருணை ஆசீர், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 2,3,4ம் திருவிழாக்களில் தினமும் நவநாள் திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை ஆசீர், மறையுரை, திவ்ய நற்கருணை ஆராதனை, கலை நிகழ்ச்சிகள் ஆகியன நடந்தது. 5,6,7ம் திருவிழாக்களில் நவநாள் திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை ஆசீர், பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடக்கிறது. 8ம் திருநாளில் நவநாள் திருப்பலி, திவ்ய நற்கருணை பவனி, 9ம் திருவிழாவில் நவநாள் சிறப்பு திருப்பலி, அன்னையின் அலங்கார தேர்ப்பவனி, ஆடம்பர மாலை ஆராதனை, வாணவேடிக்கை, 10ம் திருவிழாவில் ஆடம்பர திருவிழா கூட்டு திருப்பலி, புதுநன்மை வழங்குதல், மறையுரை, ஞானஸ்நானம், விளையாட்டு போட்டிகள், அலங்கார தேர்ப்பவனி, கலை இரவு ஆகியன நடக்கிறது. வரும் 17ம் தேதி நன்றி திருப்பலி, கொடியிறக்கம், ஊர்பொது அசனம், 18ம் தேதி கோயில் நிர்வாக ஆலோசனை கூட்டம், புனித அந்தோணியார் கெபியில் நன்றி திருப்பலி, சமபந்தி விருந்து, 22ம் தேதி சாத்தான்குளம் மறைமாவட்ட முதன்மை குரு எட்வர்ட் அடிகளாருக்கு குருத்துவ வெள்ளி விழா ஆகியன நடக்கிறது. ஏற்பாடுகளை கடகுளம் பங்குதந்தை சில்வஸ்டர் அடிகளார், ஊர் பொதுமக்கள், ஆலய நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.