பதிவு செய்த நாள்
21
டிச
2016
11:12
பழநி: பழநி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் நலன்கருதி மலைக்கோயில் மற்றும் உபகோயில்களில் சிறப்பு பூஜைகள் ஒருவாரம் நடக்கிறது. பாதயாத்திரைக்கு உலகப்புகழ்பெற்ற பழநி தைப்பூச விழா வரும் 2017 பிப்.,3ல் துவங்கி பிப்.,12 வரை நடக்கிறது. இவ்விழாவிற்காக மார்கழியில் மாலை அணிந்த முருக பக்தர்கள் விரதம் இருந்து, பழநிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர். ஆங்கிலபுத்தாண்டு, பொங்கல்பண்டிகை, தைப்பூசவிழா நாட்களில் லட்சகணக்கான மக்கள் மூலவர் ஞானதண்டாயுதபாணி சுவாமிதரிசனம் செய்கின்றனர். அவ்வாறு விரதம் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் நலன்வேண்டி பழநிமலைக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு யாகபூஜைகள் நடக்கிறது. இவ்வாண்டு டிச.,20 முதல் டிச.,27வரை நடக்கிறது. நேற்று மலைக்கோயிலில் ஆனந்தவிநாயகர் சன்னதியில் அமிர்தம் குருக்கள், செல்வசுப்ரமணியம் முன்னிலையில் சிறப்பு யாகபூஜை, கணபதிஹோமத்துடன் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகாதீபாரதனை நடந்தது. இன்று அடிவாரம் வீரதுர்க்கையம்மன், டிச.,22ல் ஒட்டன்சத்திரம் குழந்தைவேலப்பர் கோயில்சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை நடக்கிறது. மேலும் கிரிவீதி அழகுநாச்சியம்மன்கோயில், மகிஷாசூரமர்த்தினி, பாதவிநாயகர் கோயிலில் டிச.,27வரை அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா(பொ) செய்கின்றனர்.