பாரத மாதா கோவில்: ஜன.,12ல் பிரதமர் திறந்து வைக்கிறார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2016 11:12
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள பாரத மாதா கோவிலை பிரதமர் மோடி ஜன.,12-ம் தேதி வீடியோ கான்பரசிங் மூலம் திறந்து வைக்கிறார். பாரத மாதா கோவில்: இது குறித்து விவேகானந்தா கேந்திர மையத்தின் துணை தலைவர் பாலகிருஷ்ணன் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தா கேந்திரமையத்தில் சுமார் 25 கோடி ரூபாய் செலவில் பாரத மாதா கோவில் கட்டப்பட்டுள்ளது. ராமாயண தரிசன சித்தர கூடத்துடன் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சி கூடத்தின் முன்பு 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் 27 அடிஉயர அனுமன் சிலை வைக்கப்பட்டுள்ளது. மேலும் 12.5 அடி உயரத்தில் 5.5 டன் எடையில் பாரத மாதா சிலையும் வைக்கப்பட்டுள்ளது. கோவில் பணிகள் அனைத்தும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
அமைச்சர்கள் பங்கேற்பு: மேலும் விவேகானந்தர் பிறந்த தினமான ஜன.,12-ம் தேதி பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்சிங் முறையில் கோவிலை திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், மகேஷ்சா்மா மற்றும் குஜராத் சாமியார் முராரிபாபு உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.