ஒரு தேவாலயத்துக்கு ஒரு பணக்காரரும், கூலித்தொழிலாளியும் சென்றனர். பணக்காரர் ஆண்டவர் முன்னால் நின்று, “தேவனே! நான் அநியாயக்காரர், விபச்சாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப் போலவும், இந்த கூலித்தொழிலாளி போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். வாரத்தில் இரண்டு நாள் உபவாசிக்கிறேன். என் சம்பளத்தில் பத்தில் ஒரு பாகம் ஆலயத்துக்கு செலுத்துகிறேன், என்று ஜெபம் செய்தார். அதாவது அவர் எந்த குற்றமும் செய்யாதவர் என்று ஆண்டவரிடம் தன்னை பெருமையுடன் அறிமுகப்படுத்திக் கொண்டார். கூலித்தொழிலாளியோ துாரத்தில் நின்று கொண்டு, “தேவனே என் மேல் கிருபையாயிரும்,” என்றான். தன்னை பற்றி உயர்த்தி அவன் பேசிக் கொள்ளவில்லை. இதனால் துாரத்தில் இருந்து வணங்கினாலும் தேவன் அவனது ஜெபத்தை ஏற்றார். “அவனல்ல (பரிசேயன்), இவனே நீதிமானாக்கப்பட்டவனாய் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்கு (மக்களுக்கு) சொல்கிறேன். ஏனெனில், தன்னைத்தானே உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்,” என்கிறார் இயேசு கிறிஸ்து. மனிதன் தாழ்பணிந்து நடக்க வேண்டும் என்பதே இன்றைய சிந்தனை.