தேவகோட்டை: மார்கழி அஷ்டமியன்று சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அன்றைய தினம் சுவாமி மக்களுக்கு படி அளப்பார் என்பது ஐதீகம். மார்கழி அஷ்டமி பிரதட்சனம் எனும் இந்த சிறப்பு தினத்தை முன்னிட்டு நகர சிவன் கோயிலிலிருந்து கையில் தங்க படியுடன் மீனாட்சி சுந்தரேஸ்வரர்பிரியாவிடையுடனும், மீனாட்சிஅம்மன் விநாயகர், முருகன், சண்டீகேஸ்வரருடன் வெள்ளி வாகனங்களில் நகர் வலம் வந்து மக்களுக்கு அருள்பாலித்து படி அளந்தார். மாலையில் கோயிலை அடைந்த பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்புபூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அரிசி வழங்கப்பட்டது.