யார் கையை நீட்டினாலும் கொடுப்பது தானம் அல்ல. தானம் செய்வதிலும் பலநிலைகள் உண்டு. தானம் தருமம் என்று இருவேறு சொற்களைப் பயன்படுத்தினாலும் அதிலும் வேறுபாடு உண்டு. நம்மை விட உயர்ந்தவருக்குச் செய்வது தானம். நம்மை விட எளியவருக்குச் செல்வது தர்மம். பலனை எதிர்பார்த்துச் செய்யும் தானம் ராஜஸ தானமாகும். பொருத்தமில்லாத நபருக்குச் செய்யும் தானம் தாமசதானம். சரியான தருணத்தில் சரியான நபருக்குச் செய்யும் தானம் சாத்வீக தானம்.