பதிவு செய்த நாள்
24
டிச
2016
12:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவுக்கு துணிப்பை, சணல்பை கொண்டு வந்து உபயோகப்படுத்திய பக்தர்களுக்கு தங்க, வெள்ளி நாணயம் பரிசு வழங்கப்படுகிறது. அதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் விபரங்களை, கலெக்டர் பிரசாந்த். மு.வடநேரே வெளியிட்டார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபவிழாவுக்கு வரும் பக்தர்களிடையே பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, துணிப்பை, சணல்பை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பிற பைகளை கொண்டு வரும் பக்தர்களுக்கு, குலுக்கல் முறையில் தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசு வழங்கப்படும் என, மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி, சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை கொண்டு வந்த பக்தர்கள், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், தங்க நாணயம் பரிசு பெற்ற அதிர்ஷ்ட எண்கள்:- 015255, 334011, 335287, வெள்ளி நாணயங்கள் பரிசு பெற்ற எண்கள்:- 291074, 291148, 2917019, 015273, 015894, 016991, 105998, 0188011, 018255, 110287, 333997, 248813, 034199, 087444, 335208, 335456, 092645, 092698, 087691, 087736, 092969, 087811, 087843. மேற்கண்ட எண்களுடைய கூப்பன் வைத்திருப்போர், திருவண்ணாமலை வேங்கிக்கால் அசோக்நகரில் உள்ள, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தில், வரும், 31க்குள் அணுகி தங்க, வெள்ளி நாணங்களை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.