கோவை: உடுப்பி பலிமார் மடாதிபதி வித்யாதீஷ தீர்த்த ஸ்ரீ பாத சுவாமிகள் நேற்று கோவை சலிவன் வீதி வேணுகோபாலசுவாமி கோவிலுக்கு வருகை தந்தார். அவருக்கு பக்தர்கள் சார்பில் பூரணகும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பலிமார் மடாதிபதி, ‘சுந்தரகாண்டம்’ என்ற, நுாலை வெளியிட்டார். உடுப்பி பலிமார் மடத்தின் இளைய பட்டம் ஸ்ரீ ஈஷப்பிரிய தீர்த்தர் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.