திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், 63 நாயன்மார்கள் பெருவிழா கோலாகலமாக நடந்தது. திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் துணைக்கோவிலான சுகுந்த குந்தலாம்பிகை உடன்மர் கைலாசநாதர் கோவிலில், சிவகாமியம்மமை உடன்மர் சிதம்பரேஸ்வரர் அறுபத்துமூன்று நாயன்மார்கள் மற்றும் தொகையடியார் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பூச்செரிதல் விழா நடந்தது. பஞ்சவாத்திய முழக்கங்களுடன் நறுமண மலர்களால் கைலாசநாதருக்கு பூச்செரிதல் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து, அறுபத்துமூன்று நாயன்மார்கள் மற்றும் தொகையடி உற்சவ மூர்த்திகள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, அலங்கரிக்கபட்ட புஷ்பபல்லாக்கில் வாணவேடிக்கையுடன் திருவீதி உலா நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.