கீழக்கரை: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் இன்று (டிச.,26) மண்டல பூஜை நடக்கிறது. காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூஜை தொடங்குகிறது. காலை 8 மணிக்கு முத்துநாச்சியம்மன் கோயிலில் இருந்து பேட்டை துள்ளல் துவங்கி வல்லபை ஐயப்பன் கோயில் பின்புறமுள்ள பஸ்மக்குளத்தில் புனித நீராடலும், பின்னர் மூலவருக்கு மகா அபிஷேக ஆராதனை, பஜனை, அன்னதானம் நடக்கிறது.விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் பங்கேற்பர். கோயிலில் ஒவ்வொரு ஆங்கில மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை உலக நன்மைக்கான கூட்டு வழிபாடு, அன்னதானம் நடக்கிறது. ஏழைகளுக்கு மருத்துவம், புத்தாடை, கல்வி உதவி வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை குருசாமி மோகன், வல்லபை ஐயப்பா சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.