திருப்பூர்: திருப்பூர் விவேகானந்தா பள்ளியில், பாதபூஜை விழா கொண்டாடப்பட்டது. திருப்பூர் கே.செட்டிபாளையம் விவேகானந்தா வித்யாலயாவில், பாதபூஜை விழா நடந்தது. விவேகானந்தா சேவா அறக்கட்டளையின் உறுப்பினர் ஞானபூபதி வரவேற் றார். கோவை சின்மயா மிஷன் பிரம்மச்சாரி விக்னேஷ் சைதன்யா வழிகாட்டுதலின்படி, பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள், தங்களது பெற்றோருக்கு பாதபூஜை செய்து, ஆசிர்வாதம் பெற்றனர். உப தலைவர் தியாகராஜன் சிறப்புரையாற்றினார். வெகு சிறப்பாக நடந்த விழாவில், நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.