பதிவு செய்த நாள்
27
டிச
2016
01:12
குமாரபாளையம்: குமாரபாளையம், அம்மன் நகர் அய்யப்பன் கோவில், 22ம் ஆண்டு, பிரமோற்சவ விழா நடந்து வருகிறது. குமாரபாளையம், அம்மன் நகர் அய்யப்பன் கோவிலில், ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு விழா, கடந்த, 16 அன்று துவங்கி, நடந்து வருகிறது. கடந்த, 24ல், ஐயப்பனுக்கு, அஷ்ட திரவிய மகா அபிஷேகம், 25ல், மண்டல பூஜை, சிறப்பு பஜனை, அன்னதானம் மற்றும் புஷ்பாஞ்சலி ஆகியவை நடந்தன. பக்தர்கள் பெருமளவில் பங்கேற்று, அய்யப்பன் புகழ் பாடும் பாடல்களை பாடினர். ஜன., 14ல் காலை, 6:00 மணிக்கு, அரங்கநாதர் ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாணம், மாலை, 6:00 மணிக்கு, கற்பூர ஆழி பிரதட்சணம் நடக்கவுள்ளது.