ப.வேலூர்: ப.வேலூர், சுற்றுவட்டார பகுதிகளில், மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, சிவாலயங்களில் சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. மார்கழி மாதத்தில் வரும் பிரதோஷம், மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதை முன்னிட்டு, நேற்று, ப.வேலூர் சுற்றுவட்டார பகுதி களிலுள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பாண்டமங்கலம், புதிய காசி விஸ்வநாதர் ஆலயத்தில், நந்திக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அபிஷேக ஆராதனை நடந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.