பதிவு செய்த நாள்
12
அக்
2011
11:10
பண்ருட்டி : பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஏகதின பிரம்மோற்சவம் நடந்தது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை ஹேமாம்புஜ வல்லி தாயார் சமேத சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று ஏக தின பிரம்மோற்சவத்தையொட்டி அதிகாலை 4 மணிக்கு சுப்ரபாரதம், 4.30 மணியளவில் தோமாலை சேவை, காலை 5 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. காலை 6 மணிக்கு மூலவர் சரநாராயண பெருமாள், தாயார், சயன நரசிம்மர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள், அர்ச்சனைகள் நடந்து மூலவர் பெருமாள் நெய்தீப தரிசனத்தில் திருமலை சீனுவாசபெருமாள் அலங்காரத்தில் அருள்பாலித்தார். காலை 8 மணிக்கு பெருமாள் அம்ச வாகனம், 9 மணிக்கு சிம்ம வாகனம், 10 மணிக்கு அனுமன் வாகனம், 11 மணிக்கு சேஷவாகனம், 12 மணிக்கு கருட வாகனத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிற்பகல் 3 மணிக்கு யானை வாகன சேவையும், 4 மணிக்கு சூர்ணோத்சவம், 5 மணிக்கு குதிரை வாகன சேவை, மாலை 6 மணிக்கு திருத்தேர் உள்புறப்பாடு, இரவு 7 மணிக்கு தீர்த்தவாரி, 7.30 மணிக்கு கொடியிறக்கம் நடந்தது. திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் சம்பத் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன், தலைமை அர்ச்சகர் ஸ்ரீராமன் பட்டாச்சாரியார், ஸ்ரீதர், விக்னி பட்டாச்சாரியார் செய்திருந்தனர்.