பதிவு செய்த நாள்
12
அக்
2011
11:10
தூத்துக்குடி : தூத்துக்குடி திரேஸ்புரம் தூய குழந்தை தெரசாள் தொன்போஸ்கோ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் முக்கிய அம்சமாக உலகெங்கும் பவனியாக வலம் வந்துகொண்டிருக்கும் தொன்போஸ்கோவின் வலது கரம் தாங்கிய பெட்டகம் வரும் 15ம் தேதி ஆலயத்திற்கு வருகிறது. தூத்துக்குடி திரேஸ்புரத்தில் உள்ள தூய குழந்தை தெரசாள் ஆலய தொன்போஸ்கோ திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு காலையும் மாலையும் சிறப்பு திருப்பலி நடந்தது. 8ம் தேதி சங்குளி மண்டலம் சார்பில் மாலையில் சிறப்பு திருப்பலி நடந்தது. விழாவில் இன்று மாலை சிறுமலர் உயர்நிலைப்பள்ளி, ஆர்.சி சிறுமலர் தொடக்கப்பள்ளி, அக்சீலியம் ஆங்கிலப்பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ளும் சிறப்பு திருப்பலி நடக்கிறது. திருப்பலியில் பிரான்சிஸ் சேல்ஸ் குழந்தை தெரசாள் கிறிஸ்தவ வாழ்வின் வழிகாட்டி என்ற தலைப்பில் பேசுகிறார். தொடர்ந்து நாளை மாலை 6.30 மணிக்கு இளைஞரின் தந்தை புனித ஜான்போஸ்கோ என்ற மையச்சிந்தனையில் அமலஜெயராமன் திருப்பலி நடத்துகிறார். வரும் 13ம் தேதி மாலை 6.30 மணிக்கு புனிதர்களின் புண்ணிய வாழ்வு என்ற மையசிந்தனையில் அந்தோணிரூபன் தாஸ் திருப்பலி நடத்துகிறார். வரும் 14ம் தேதி காலை சிறப்பு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஆராதனையும் நடக்கிறது. அன்று எளிமை உள்ள குழந்தை தெரசாள் என்ற மையசிந்தனையில் அந்தோணி பிச்சை, ஹென்றி டொமினிக் ஆகியோர் மறையுரையாற்றுகின்றனர். விழாவில் முக்கிய நாளான வரும் 15ம் தேதி காலை 6 மணிக்கு தொன்போஸ்கோவின் வலதுகரம் தாங்கிய பெட்டகம் வருகை தருகிறது. அன்று தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் மற்றும் மறை மாவட்ட முதன்மைகுரு ஆண்ட்ரு டீரோஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. வரும் 16ம் தேதி காலை 6.30 மணி, மாலை 6 மணி, மாலை 6.30 மணிக்கும் குழந்தை தெரசம்மாள் பெருவிழா திருப்பலி, புதுநன்மை, பங்குப்பேரவை தொன்போஸ்கோவிற்கு பிரியா விடை, நற்கருணை ஆசிர், மேஜிக் ÷ஷா ஆகிய நடக்கிறது. இதில் திருச்சி சலேசிய மாநிலத்தலைவர் ஆல்பர்ட் ஜான்சன், உதவி மாநிலத்தலைவர் தாஸ்கென்னடி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர். வரும் 17ம் தேதி காலை.6.30 மணிக்கு கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை தொம்மைராஜ், உதவிபங்குதந்தை சைமன்ராஜ், சலேசியா சகோதரிகள், சலேசியா உடன் உழைப்பாளர்கள், பங்குபேரவை, அன்பியங்கள், பக்தசபை உட்பட பலர் செய்துவருகின்றனர்.