பதிவு செய்த நாள்
30
டிச
2016
01:12
சென்னை: திருத்தணி முருகன் கோவில், திருப்படி திருவிழாவையொட்டி, நாளை, அரக்கோணம் - திருத்தணி இடையே, சிறப்பு புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.இந்த ரயில்கள், நாளை அரக்கோணத்தில் இருந்து, இரவு, 10:00 மணி மற்றும் 11:10 மணிக்கு புறப்பட்டு, இரவு, 10:20 மணி, 11:30 மணிக்கு, திருத்தணி சென்றடையும். திருத்தணியில் இருந்து, இரவு, 10:30 மணி மற்றும் 11:40 மணிக்கு புறப்பட்டு, அரக்கோணத்திற்கு, இரவு, 10:50 மணி மற்றும் 12:00 மணிக்கு சென்றடையும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.