Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
யோகி ராம் சுரத்குமார் ஜெயந்தி விழா ... திருப்பூர் தேவாலயங்களில் ஆராதனை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை ஆருத்ரா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2017
02:01

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழி ஆருத்ரா மகா தரிசன உற்சவம், நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதனையொட்டி, நேற்று கொடி மரத்திற்கு விக்னேஸ்வர பூஜை நடந்தது. நாளை காலை சிவகாமசுந்தரி அம்மன் சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை, பஞ்சமூர்த்திகள் பிரகார வலம்வந்து கொடிமரம் சன்னதியில் எழுந்தருள்கின்றனர். பின்னர், கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை, பன்னிரு திருமுறை வழிபாடு செய்து, காலை 7:00 மணிக்கு உற்சவக்கொடி ஏற்றி, மகா தீபாராதனை நடக்கிறது. தினமும் சிவகாமசுந்தரி அம்மன் சமேத நடராஜருக்கு சிறப்பு தீபாராதனை, இரவு நடராஜர் புறப்பாடு, வேதபாராயணம், பன்னிரு திருமுறை பாராயணம் நடக்கிறது. 6ம் தேதி தெருவடைச்சான் உற்சவம், 10ம் தேதி நடராஜர் தேரோட்டம், மாலை, சுவாமி தேரிலிருந்து இறங்கி ஆயிரங்கால் மண்டபம் முகப்பு ராஜசபையில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு 8:00 மணிக்கு சுவாமிக்கு ஏக கால லட்சார்ச்சனை, அதிகாலை 2:00 மணிக்கு சிவகாமசுந்தரி அம்மன் சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. 11ம் தேதி காலை ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். பின், சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்று, பிற்பகல் 4:00 மணிக்கு ஆருத்ரா மகா தரிசனம் சித்சபை பிரவேசம் நடக்கிறது. ஏற்பாடுகளை, சபாநாயகர் கோவில் பொது தீட்சிதர்கள் செயலர் பட்டுரத்தின தீட்சிதர் தலைமையில், உற்சவ ஆச்சாரியார் நடராஜரத்தின தீட்சிதர் உள்ளிட்டோர் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar