கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை ஆதிபராசக்தி கோவிலில் இருந்து, மேல்மருவத்தூர் செல்லும் பக்தர்கள், மாலை அணியும் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணராயபுரம் தாலுகா, லாலாப்பேட்டை சந்தைபேட்டை அருகில், ஆதிபராசக்தி கோவில் உள்ளது. கோவிலின் ஆதிபராசக்தி வழிபாட்டு குழுவினர் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு, பக்தர்கள் சென்று வருவது வழக்கம். அதன்படி, நேற்று லாலாப்பேட்டை பகுதியை சேர்ந்த பக்தர்கள், ஆதிபராசக்தி உருவ படத்திற்கு மலர்களால் அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தினர். சிலர், மாலை அணிந்து கொண்டும், சிலர் இருமுடி கட்டி மேல்மருவத்தூர் கோவிலுக்கு புறப்பட்டனர். நிகழ்ச்சியை, லாலாப்பேட்டை ஆதிபராசக்தி வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.