தஞ்சை: 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் நடக்கும் மகாமகம் விழா, பிரசித்தி பெற்றது. உலகெங்கும் இருந்து பக்தர்கள் வந்து புனித நீராடும் பெருமை மிகுந்த மகாமகம் குளம், இப்போது பராமரிப்பற்ற நிலையில் விடப்பட்டுள்ளது. குளத்தை சீரமைக்கவும், தண்ணீர் நிரப்பவும் அரசு முன்வர வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.