பதிவு செய்த நாள்
05
ஜன
2017
12:01
திருத்தணி: விஜயராகவ பெருமாள் கோவிலில், வரும் 8ம் தேதி, வைகுண்ட ஏகாதசியையொட்டி, அதிகாலையில் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான திருத்தணி கோட்டா ஆறுமுக சுவாமி கோவில் வளாகத்தில் விஜயராகவ பெருமாள் மற்றும் விஜயலட்சுமி தாயார் கோவில் உள்ளது. விஜயராகவ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. வரும், 8ம் தேதி ஏகாதசியையொட்டி, அன்று, அதிகாலை 5:00 மணிக்கு, சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. தொடர்ந்து மூலவர் விஜயராகவ பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும். அதேபோல், திருத்தணி அடுத்த, நெமிலி கிராமத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவிலிலும், 8ம் தேதி ஏகாதசியையொட்டி, அதிகாலை, 4:30 மணிக்கு, சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவர்.